மகளின் கியூட்டான வீடியோவை ஷேர் செய்த நடிகை ஸ்ரேயா சரண்!
October 11, 2021 / 07:25 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.
‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என படங்கள் குவிந்தது. ஸ்ரேயா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா சரண். இப்போது, ஸ்ரேயா சரண் நடிப்பில் ‘கமனம்’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி), ‘RRR’ (தெலுங்கு / தமிழ் / மலையாளம் / கன்னடம் / ஹிந்தி), தமிழில் ‘சண்டக்காரி, நரகாசூரன்’, ஹிந்தியில் ‘தட்கா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஆண்ட்ரே கோஸ்சீவ் – ஸ்ரேயா தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஸ்ரேயாவே சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Turns out @shriya1109 is an even bigger secret keeper than us 👀
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.