மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13-ஆம் தேதி). தனது 4 வயதில் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரியானவர் ஸ்ரீதேவி. அந்த படம் தான் ‘கந்தன் கருணை’. இந்த படத்தை ஏ.பி,நாகராஜன் இயக்கியிருந்தார். இதில் சிவாஜி கணேசன், சிவக்குமார், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஸ்ரீதேவி.
கதையின் நாயகியாக ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த படம் ‘மூன்று முடிச்சு’. கே.பாலச்சந்தர் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை ஸ்ரீதேவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘காயத்ரி, கவிக்குயில், 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ப்ரியா, கல்யாணராமன், குரு, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை’ என படங்கள் குவிந்தது.
ஸ்ரீதேவி தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். 1996-ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி தமிழில் நடித்த கடைசி படம் ‘புலி’. ஹிந்தி படமான ‘ஜீரோ’-வில் ஸ்ரீதேவி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படம் இவர் இறந்த பிறகு வெளியானது. இதுவரை யாரும் பார்த்திராத நடிகை ஸ்ரீதேவியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

