தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் நட்சத்திர நடிகையாக தமிழ் திரையுலகில் திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் திரிஷாவுக்கு நடிப்பு பயணம் சிம்ரன் மற்றும் பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜோடி” படத்தின் மூலம் தொடங்கியது. இந்த படத்தில் நடிகை சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார் நடிகை திரிஷா.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான “மௌனம் பேசியதே” படத்தில் அவருக்கு ஜோடியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து அன்றிலிருந்து இன்று வரை ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர் தற்போது தனது புதிய நண்பரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இவர்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பை வேறு யார் மேலும் வைத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை திரிஷா.
ஏற்கனவே நடிகை திரிஷா நாய்களை வளர்ப்பதில் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். தற்போது குதிரைகள் மீதும் தனக்கு ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தி மனிதர்களைவிட விலங்குகள் மேல் எனக்கு பாசம் அதிகம் என்று கூறியிருக்கிறார்.
View this post on Instagram
Say hi to my boo🐎😍 #SkysYourLimit
A post shared by Trish (@trishakrishnan) on