Trisha & Mansoor Ali Khan : மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… அதற்கு த்ரிஷா போட்ட பதிவு என்ன தெரியுமா?
November 24, 2023 / 06:53 PM IST
|Follow Us
பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடிக்க என்னை அணுகியபோது த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அவரை அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போவேன் என்று எண்ணினேன். நான் எத்தனை படத்துல அதுபோன்ற கற்பழிப்பு காட்சிகளில் நடித்திருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இவர் பேசியதை கேட்டதும் நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டனர். மேலும், இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் சொல்ல வருவது என்னவென்றால்… அடக்க நினைத்தால் அடங்க மறு!!!. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!
எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்” என்று கூறியுள்ளார். தற்போது, இது குறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “தவறு செய்வது மனிதகுணம், மன்னிப்பது தெய்வகுணம்” என்று பதிவிட்டுள்ளார்.