என் தற்கொலைக்கு இவர்கள்தான் காரணம் -நடிகை பரபரப்பு வீடியோ!
July 27, 2020 / 12:12 PM IST
|Follow Us
தமிழ்சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் அவரது அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை “விஜயலட்சுமி”. இதற்கு முன்னர் அவர் விஜய் சூர்யா நடிப்பில் வெளியான “ஃபிரண்ட்ஸ்” படத்தில் நடித்திருந்தார்.
இதில் மட்டுமல்லாது சில தமிழ் படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்து வந்தார் விஜயலட்சுமி. இவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் அவர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இந்த இரு நபர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பெயரையும் அவர் இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார். தன் மரணத்திற்கு இந்த இருவர் தான் காரணம் என்றும், அவர்களுக்கு தான் இறந்துவிட்டபின் முன்ஜாமீன் கொடுக்க யாரும் அனுமதிக்கக்கூடாது என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.” நான் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் இவர்களால் என்னால் வாழ முடியாமல் போய்விட்டது” என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில் பேசும் பொழுதே தான் அதிக பீபி மாத்திரைகளை எடுத்து விட்டதாகவும் தற்போது தான் இறந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவை இவர் வெளியிட்ட முதலே பரபரப்பாக இணைதளம் முழுவதும் பரவியது. இந்த நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.