• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்

இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்

  • July 18, 2020 / 05:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகள் முதல் திருமணம் தோல்வி அடைந்து, இரண்டாவது திருமணம் செய்துள்ளார்கள்.

1.சீதா

நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “ஆண்பாவம்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சீதா. நடிகர் பார்த்திபனுடன் “புதிய பாதை” படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்ட இந்த ஜோடி, பல வருடங்களாக சீதா தனிமையில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் தொலைக்காட்சி நடிகரான சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சீதா. எனினும் இந்த ஜோடியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். தற்போது சீதா தனிமையில்தான் வாழ்ந்து வருகிறார்.

2. சரண்யா

1987 ஆம் வருடம் வெளியான “நாயகன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சரண்யா. நடிகர் மற்றும் இயக்குனர் ராஜசேகர் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணங்களால் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து பாரதிராஜா படங்களில் அதிகமாக நடித்து வந்த சரண்யா 1995 ஆம் வருடம் நடிகர் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். இன்று பல ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் சரண்யா பொன்வண்ணன், தன் நடிப்புக்காக தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

3. ராதிகா

1978-ம் வருடம் வெளிவந்த “கிழக்கே போகும் ரயில்” என்ற பாரதிராஜாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ராதிகா. இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் என்பவரை 1985ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாடு காரணங்களால் பிரிந்து விட்டார்கள். பின்பு 1990ஆம் வருடம் ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனக்கசப்பு காரணங்களால் இவரையும் பிரிந்த ராதிகா சில வருடங்கள் தனிமையில் வாழ்ந்து வந்தார். பின்பு நடிகர் சரத்குமாரை 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரும் ஏற்கனவே சாயா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார்.

4.ஊர்வசி

1983ஆம் வருடம் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான “முந்தானை முடிச்சு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஊர்வசி. இன்றும் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை ஊர்வசி நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை 1999ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். பின்பு கருத்து வேறுபாடு காரணங்களால் இந்த ஜோடி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். பின்பு 2013 ஆம் வருடம் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இந்த ஜோடிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

5.குஷ்பு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற நடிகை குஷ்பூ, இவர் முதலில் நடிகர் பிரபுவை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்பு ஒரு வருடத்திலேயே இந்த ஜோடி பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஐ குஷ்பூ காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress
  • #Actresses
  • #married

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘ராட்சசன்’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ’90 ML’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘போதை ஏறி புத்தி மாறி’ பட நடிகையும் ஒரு போட்டியாளராமே!

கமல் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் ‘விக்ரம்’… விஜய் சேதுபதிக்கு ஜோடி ‘பிக் பாஸ் 4’ நடிகையா?

கமல் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் ‘விக்ரம்’… விஜய் சேதுபதிக்கு ஜோடி ‘பிக் பாஸ் 4’ நடிகையா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version