நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது .
மேலும் கஞ்சா பூ கண்ணால என்கிற பாடலின் ப்ரோமோவும் வெளியானது . இந்நிலையில் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை 2டி நிறுவனம் அறிவித்து இருந்தது .வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் விருமன் என்று தெரிவித்து இருந்தது 2டி நிறுவனம் . இந்நிலையில் கோப்ரா படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முழுவதமாக நிறைவடையாமல் இருப்பதால் கோப்ரா படம் விருமன் படம் வெளியாக இருந்த தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
இதனால் விருமன் படம் ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த படத்தில் நாயகியாக நடித்து இருக்கும் அதிதி ஷங்கருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேசிய அதிதி தனக்கு மிகவும் பிடித்த நடிகை சமந்தா என்று தெரிவித்துள்ளார் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.