• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்!

மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்!

  • January 21, 2021 / 05:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் (50% ஆடியன்ஸ்) திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தான் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், ஜனவரி 14-ஆம் தேதி சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படமும் திரையரங்குகளில் வெளியானது. இப்போது இவ்விரண்டு படங்களுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பினால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களை ரிலீஸ் செய்ய ப்ளான் போடப்பட்டுள்ளது. அப்படங்களின் லிஸ்ட் இதோ…

1.கபடதாரி :

கன்னட திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கவலுதாரி’. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார். இதில் ரிஷி, ஆனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷினி பிரகாஷ், அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றினார். இதில் ஹீரோவாக சிபிராஜ் நடித்துள்ளார். சிபிக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளாராம். ‘கபடதாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த த்ரில்லர் ஜானர் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 29-ஆம் தேதி முடிவடைந்தது. சமீபத்தில், இதன் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.களத்தில் சந்திப்போம் :

என்.ராஜசேகர் இயக்கியுள்ள ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் ஜீவா – அருள்நிதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், முக்கிய ரோல்களில் பிரியா பவானி ஷங்கர், மஞ்சிமா மோகன் நடித்துள்ளனர். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90-வது படைப்பாம். சமீபத்தில், இதன் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தை வருகிற ஜனவரி 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.ட்ரிப் :

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ட்ரிப்’. இந்த படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்க, முக்கிய ரோல்களில் கருணாகரன், சுனைனா, பிரவீன் குமார், மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தீபக்.எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் சூப்பரான டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த படத்தை வருகிற பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.காடன் :

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘காடன்’ படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ராணா டகுபதி, ஜோயா ஹூசைன், ஸ்ரியா பில்கோங்கர் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புவன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், இதன் டீசர், பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. படத்தை வருகிற மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாகிறதாம்.

5.சுல்தான் :

கார்த்தி ஹீரோவாக நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 8-ஆம் தேதி முடிந்து விட்டது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு சேர்ந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்து கொண்டிருக்கிறார்கள். இப்போது இதன் இறுதிக்கட்ட வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இதன் சூப்பரான போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டது. இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Karthi
  • #kaadan
  • #kabadadaari
  • #kalathil sandhippom
  • #Raana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கார்த்திக்கு கதை சொன்ன  பிளாக்பஸ்டர் இயக்குநர்  !

கார்த்திக்கு கதை சொன்ன பிளாக்பஸ்டர் இயக்குநர் !

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

சர்தார் படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர் !

சர்தார் படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர் !

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version