சமந்தாவை தொடர்ந்து அந்த அட்லி பட ஹீரோயினும் கணவரை விவாகரத்து செய்யப்போகிறாரா?… தீயாய் பரவும் இன்ஸ்டா பதிவு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியாமணி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கத்தில் தான். அது தான் ‘கண்களால் கைது செய்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ப்ரியாமணிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என படங்கள் குவிந்தது. ப்ரியாமணி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2017-ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ப்ரியாமணி.

இப்போது ப்ரியாமணி நடிப்பில் தெலுங்கில் ‘விரத பருவம்’, ஹிந்தியில் ‘மைதான்’, அட்லி – ஷாருக்கான் படம், தமிழில் ‘கொட்டேஷன் கேங்’, ‘சயனைடு’ (தமிழ் / தெலுங்கு / கன்னடம் / மலையாளம் / ஹிந்தி), ‘Dr.56’ (தமிழ் / கன்னடம்) என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த சில நாட்களாக, ப்ரியாமணிக்கும் அவரது கணவர் முஸ்தஃபாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டதாக தண்டோரா போடப்பட்டது. தற்போது, பரவி வரும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ப்ரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் ஸ்டில்ஸை ஷேரிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

 

Share.