தனது மனைவி குறித்து தனுஷ் போட்ட ட்வீட்… அதுக்கு ஐஸ்வர்யா சொன்ன பதில் என்ன தெரியுமா?
March 18, 2022 / 01:53 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நேற்று ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயணி’ என்ற பாடல் வீடியோ யூடியூபில் வெளியானது. இந்த பாடல் வீடியோவை நடிகர் தனுஷே தனது ட்விட்டர் பக்கத்தில் “என் ஃப்ரெண்ட் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள். God Bless” என்று குறிப்பிட்டு ஷேர் செய்துள்ளார். இதற்கு ஐஸ்வர்யா “நன்றி தனுஷ்… Godspeed” என்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.