‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த அஜித்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
April 24, 2023 / 11:29 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், நடிகர் விஜய்-க்கு டோலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கோபிசந்த் மலினேனி சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாம். விஜய்யின் கேரியரில் 68-வது படமான இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2000-யில் ரிலீஸான தமிழ் படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தை பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் அஜித் – மம்மூட்டி இணைந்து நடித்திருந்தனர். முதலில் அஜித் ரோலில் நடிக்க ராஜீவ் மேனன் விஜய்யை அணுகினாராம். பின், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus