அஜித்தை வைத்து இயக்கும் சுதா கொங்கரா… ‘தல 61’-யில் கமல் பட கனெக்ஷன்!
October 27, 2020 / 10:58 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், அஜித்தின் 61-வது படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டரில் “இயக்குநர் சுதா கொங்கரா இந்த ஸ்க்ரிப்ட் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். இது ஒரு செம்ம ஆக்ஷன் ஸ்க்ரிப்ட். நடந்ததுன்னா செமையா இருக்கும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், அஜித் – சுதா கொங்கரா இணையும் படத்தை ‘ஸ்ரீ கோகுலம் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் கமல் ஹாசனை வைத்து ‘தூங்கா வனம்’ என்ற படத்தினை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.