தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .
இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .
படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் . விரைவில் அவர் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் நடிகர் அஜித்துடன் தீனா படத்தில் இணைந்து நடித்த மகாநதி ஷங்கர் மீண்டும் அஜித்தின் 61-வது படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
நடிகர் அஜித் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார் . இந்நிலையில் நடிகர் அஜித் மங்காத்தா படத்தின் தயாரிப்பளார் தயாநிதி அழகிரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது . அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்ட தயாநிதி அழகிரி சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார் என்று அவர் பதிவிட்டுள்ளார் .இந்த சந்திப்பின் காரணம் என்ன என்று அவர் பதிவிடவில்லை . ஒரு வேலை மங்காத்தா 2 ஆம் பாகம் பற்றி இருந்தால்இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.