அஜித் – மம்மூட்டி நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தும், 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனும் இயக்குகின்றனர்.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க, பாப்புலர் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராஜீவ் மேனன் இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித்துடன் இணைந்து மலையாள மெகா ஸ்டாரான மம்மூட்டியும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.25.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.