ஹெச்.வினோத்தின் ‘AK 61’-க்காக உடல் எடையை குறைக்கும் அஜித்… எத்தனை கிலோ தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.