தனது மனைவி ஷாலினியை கட்டியணைத்தபடி நிற்கும் அஜித்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தும், 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனும் இயக்க உள்ளனர். இந்நிலையில், அஜித் மற்றும் அவருடைய மனைவியும், நடிகையுமான ஷாலினி இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shamlee (@shamlee_official)

Share.