‘அஜித் 61’ படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவா?… AGS நிறுவனம் போட்ட ட்வீட்!
September 11, 2020 / 09:00 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.
விரைவில் ‘வலிமை’யின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. சமீபத்தில், அஜித்தின் 61-வது படம் தொடர்பாக ஒரு மாஸான தகவல் கசிந்தது. இந்த படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும், இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, இது தொடர்பாக ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் அர்ச்சனா பதிவிட்ட ட்வீட்டில் “இந்த தகவல் உண்மை அல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.
We have not signed any projects for 2020. Saw some fake news making the rounds so just wanted to clarify on behalf of @Ags_production
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.