நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .
வருகின்ற பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் அஜித் உலக சுற்றுலா செல்ல இருக்கிறார் தற்போது இந்திய அளவில் சுற்றுலா சென்று இருக்கிறார் . அஜித்துடன் சுற்றுலா சென்ற ஒரு நண்பர் அஜித்துடன் நடந்த உரையாடலை பகிர்ந்து உள்ளார் .
எதிர்மறையான விமர்சனங்கள் , வெறுப்பூட்டும் செய்திகள் , ட்ரோல்கள் , எதிர்மறையான மீம்ஸ்கள் , போண்டவற்றை எப்படி எதிர்கொள்கீறிர்கள் என்று அஜித்திடம் கேட்டுள்ளார் அந்த நண்பர் .
இதற்கு ஒரு குட்டி கதை சொல்லியிருக்கிறார் அஜித் . இத்தகைய செயல்களை நிறுத்துமாறு சொல்வது , இறைச்சிக்காக விலங்குகளை கொள்வதை நிறுத்துமாறு கசாப்பு கடைக்காரரிடம் கோரிக்கை வைப்பது போன்றது . அப்படி அவரிடம் சொன்னால் அவர் , அசைவ பிரியர்கள் இங்கே இருக்கிறார்கள் , அவர்களுக்கு தனி சந்தை உள்ளது என்று நிச்சயமாக பதில் அளிப்பார் .
அப்படி அவர் அதை செய்யாமல் விட்டு விட்டால் நிச்சயம் வேறு யாராவது அதை தன் குடும்பத்திற்காக செய்வார் . அதே போல் சமூகத்தில் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்தகைய ட்ரோல்களையும் , எதிர்மறை விமர்சனங்களையும் விரும்புகிறார்கள் . மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கும் , பாதுகாப்பிற்கும் , தீங்கு விளைவிக்காத வரையில் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் என்று அஜித் கூறியுள்ளார் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus