அஜித் ஷாலினியை காதலித்த போது இதுதான் ரகசிய வார்த்தையாம்!
August 13, 2020 / 03:13 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் 1993 ஆம் வருடம் வெளியான “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.
தன் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வந்த அஜித் 2000 ஆம் வருடம் தன்னுடன் “அமர்க்களம்” படத்தில் நடித்த ஹீரோயின் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் க்யூட் ஜோடி என்றால் அதில் அஜித்-ஷாலினி முதலிடத்தில் இருப்பார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இணைபிரியா ஜோடியாக வாழ்ந்துவரும் அஜித் மற்றும் ஷாலினி காதலித்த காலத்தில் ஷாலினியின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்க அஜித் ரகசிய வார்த்தை ஒன்றை பயன்படுத்தி வந்தாராம்.
இவர் பெரும்பாலும் தன்னுடைய தொலைபேசி மூலம் ஷாலினியிடம் பேசாமல் தன்னுடைய சக நடிகரான குஞ்சாக்கோ போபன் என்பவரின் தொலைபேசியை பயன்படுத்தி தான் ஷாலினியிடம் பேசுவாராம்.
அப்படி தான் பேசும் போது, வீட்டில் யாரேனும் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக ஏகே47 என்ற வார்த்தை முன்பு கூறிவிட்டு, ஷாலினி தான் என்று உறுதி செய்து பின்புதான் பேசுவாராம். காதலித்த காலத்தில் அஜித் இவ்வளவு குறும்புத்தனமாக இருந்தார் என்பதை அவரது ரசிகர்கள் மிகவும் ரசித்து தற்போது இணையதளத்தில் இந்த செய்தியை வைரலாக்கி வருகிறார்கள். அஜித் ஷாலினி இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.