இந்தியாவில் தனது பைக் பயணத்தை முடித்து மாஸ் காட்டிய அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!
December 17, 2022 / 09:34 AM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இப்படம் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.
‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், நடிகர் அஜித் தனது உலக பைக் பயணத்தின் முதல் கட்டமாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணித்து முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், பைக் ரைடு சென்றபோது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus