அடேங்கப்பா… ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் படம் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61-வது படத்தில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் அஜித் ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.