’26YearsOfKadhalKottai’… இந்த படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?
July 14, 2022 / 07:24 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.
இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.
‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காதல் கோட்டை’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயாணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அகத்தியன் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. கடந்த ஜூலை 12-ஆம் தேதியுடன் இந்த படம் வெளி வந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#26YearsOfKadhalKottai’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். தற்போது, இந்த படத்துக்காக அஜித் ரூ.6 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.