அடேங்கப்பா… ‘விஸ்வாசம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் அஜித்தின் மகளாக வலம் வந்த அனிகா சுரேந்திரனுக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, அஜித் ‘விஸ்வாசம்’-க்காக ரூ.35 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.