அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘லைகா’?
January 3, 2023 / 02:55 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.
இந்த படம் கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம். ‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா’ ஆகிய 3 பாடல்கள் வெளியானது.
இந்த ட்ரெய்லர் மற்றும் ‘சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா’ ஆகிய 3 பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே, இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியது. தற்போது, இந்நிறுவனம் ரூ.14 கோடிக்கு இப்படத்தை வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus