அஜித்தின் ‘வலிமை’ பட வில்லன் கார்த்திகேயாவுக்கு நிச்சயதார்த்தம்… வைரலாகும் ஸ்டில்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திகேயா. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படம் ‘பிரேமதோ மீ கார்த்திக்’. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘RX 100’ என்ற தெலுங்கு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ‘RX 100’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் கார்த்திகேயாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹிப்பி, குணா 369, நானி’ஸ் கேங் லீடர், 90 ML, சாவு கபரு சல்லகா’ என தெலுங்கு படங்கள் குவிந்தது. இப்போது, நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித்தின் படமான இதில் கார்த்திகேயாவுக்கு பவர்ஃபுல்லான வில்லன் ரோலாம்.

இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 22-ஆம் தேதி) நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.