மதுரை ரௌடியாக நடிக்க போகிறாரா அஜித்?

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் பலர் தங்கள் திறமைகளை தங்களது படங்கள் மூலம்
நிரூபித்துள்ளனர்.
அந்த வகையில் 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மிகப்பெரிய வெற்றியை
அடைந்தது .இந்த படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ். தனது முதல் படத்திலேயே நல்ல
இயக்குனர் இன்ற அடையாளத்தை தமிழ் ரசிகர்கள் இவருக்கு கொடுத்தார்கள் . இந்த படத்தில்
நடிகர் வெற்றி , நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து இருந்தனர் .

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கும் அடுத்த படத்தின் மீதான
எதிர்பார்ப்பு அதிகரித்தது . இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகர் அதர்வா மற்றும்
பிரியா பவானி ஷங்கரை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கி உள்ளார் . சில
காரணங்களால் இந்த படம் வெளியாகாமல் இருக்கிறது .

இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் நடிகர் அஜித்குமாரிடம் ஒரு கதை கூறி உள்ளதாக ஒரு
தகவல் வெளியாகி இருக்கிறது .மதுரை உள்ள ஒரு ரௌடியின் வாழக்கையை பற்றிய கதை
என்றும் பாஷா போன்ற கதை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது .

நடிகர் அஜித் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் அதை தொடர்ந்து
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் . இந்த படங்களை தொடர்ந்து அஜித்
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது

Share.