மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வரும் அமலா அக்கினெனி!

1986 ஆம் வருடம் டி.ராஜேந்தர் இயக்கத்தில் “மைதிலி என்னை காதலி” என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா அக்கினேனி.

தொடர்ந்து வேலைக்காரன், இது ஒரு தொடர்கதை, அக்னி நட்சத்திரம், சத்யா, ஜீவா, மாப்பிள்ளை, நாளைய மனிதன், வெற்றி விழா, கற்பூர முல்லை போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தவர்.

இதைத்தொடர்ந்து 1992 ஆம் வருடம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் எந்த தமிழ் படங்களிலும் நடிக்காத இவர் 30 வருடங்களுக்கு பிறகு தற்போது ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான தகவலை தற்போது ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

Share.