2007ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.
பின்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா ஜெரெமையா தற்போது ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் தற்போது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “மூன்று மாதங்களுக்கு முன் யாரோ எப்போது மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வீர்கள் என்று கேட்டபோது, ஜூலை மாதம் சென்று விடுவேன் என்று குத்துமதிப்பாக கூறினேன். ஆனால் அது தற்போது உண்மையாகிவிட்டது. இதை உண்மையாக்கிய பிரபஞ்சத்திற்கு எனது நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஆண்ட்ரியா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் “என் கதாபாத்திரம் குறித்து எதுவும் சொல்ல முடியாது, ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். விஜய் போன்ற பெரிய சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது சிறந்த அனுபவம், நான் அவரின் ரசிகையாகி விட்டேன்” என்றிருக்கிறார்.
https://www.instagram.com/p/CCuugJJJiPR/?igshid=13qt2odu3muro
தற்போது நாஞ்சில் இயக்கத்தில் இவர் “கா” என்னும் படத்திலும், கமலக்கண்ணன் இயக்கத்தில் “வட்டம்” என்ற படத்திலும், சுந்தர்.சி இயக்கத்தில் “அரண்மனை 3” படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.