2007ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.
பின்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா ஜெரெமையா தற்போது ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது ஆண்ட்ரியா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்கவுட் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு தன் ரசிகர்களை உடலை கட்டுக்கோப்பாக வைப்பது குறித்து கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/CGl8fj6JOPw/?utm_source=ig_web_copy_link