அந்த விஷயத்தில் கரெக்ட்டாக இருப்பாராம் ஆண்ட்ரியா… என்ன ஒரு நல்ல மனசு!
August 5, 2020 / 12:09 PM IST
|Follow Us
தமிழ் திரையுலகில் ஒரு படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை மற்றும் இயக்குநருக்கு ஆஃபர்கள் வந்த வண்ணமிருக்கும். இப்படி அடுத்தடுத்து வரும் ஆஃபர்களில் நல்ல கதைகளை மட்டும் பார்க்காமல் தங்களது சம்பளத்தையும் அதிக படுத்திக் கொண்டே செல்வார்கள் ஹீரோ – ஹீரோயின்கள்.
இதனாலையே பல நல்ல கதைகளில் சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்க முடியாமல் போக, வேறு சில நடிகர்கள் – நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இது பல ஆண்டுகளாகவே தொடர்ந்து சினிமாவில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும், அப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றும், தனது சம்பளத்தை ரூ.70 லட்சம் என்று ஃபிக்ஸ் செய்துவிட்டு, கடந்த சில வருடங்களாகவே வலம் வருகிறாராம் பிரபல ஹீரோயின் ஒருவர்.
அவர் நம்ம நடிகை ஆண்ட்ரியாவாம். இயக்குநர் கூறும் கதை ஆண்ட்ரியாவுக்கு பிடித்து விட்டால் போதுமாம். பல நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கையில், இது போதும் என்ற மனதுடன் இருக்கிறாராம் ஆண்ட்ரியா. தற்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘மாஸ்டர், வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.