ட்ரெண்டிங்கில் அனிருத் பாடல் !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா ஆகியோர் நடித்து இருக்கிற படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் ,ஆகிய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார் .

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு இந்த படம் 25வது படம் என்று சொல்லப்படுகிறது .
இந்த படத்தில் 7 பாடல்கள் இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருந்தது . ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு காதல் , டூ டூ டூ , நான் பிழை ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .இந்நிலையில் நேற்று இந்த படத்தில் இருந்து நான்காவது பாடல் வெளியாகி இருந்தது.

விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத் மற்றும் அந்தோணி தாசன் இணைந்து பாடியுள்ள “டிப்போம் டிப்போம்” என்கிற பாடல் நேற்று இரவு வெளியானது . இதுவரை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் இந்த பாடலை கேட்டு உள்ளனர் . இந்த பாடல் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது . மேலும் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

Share.