முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இணைகிறார்களா?
July 24, 2020 / 08:03 PM IST
|Follow Us
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவரின் இந்த படத்தின் வெளியீட்டை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது புதிய செய்தி என்னவென்றால் விஜய் சேதுபதி ஏ.எல்.விஜய் நடிப்பில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும், இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
இந்த படத்தை இஷாரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க உள்ளதாகவும், விஜய்சேதுபதிக்கு இஷாரி கணேஷ் தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகும் முதல் திரைப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை அனுஷ்கா ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏற்கனவே “தெய்வத்திருமகள்” மற்றும் “தாண்டவம்” படங்களில் நடித்திருப்பதால் இவர்கள் கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படமாகும்.
நடிகை அனுஷ்கா கடைசியாக தமிழில் “பாகமதே” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் தமிழில் “சைலன்ஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் தமிழில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.