தமிழில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் ஒப்பற்ற இசையமைப்பாளர் என்றால் அது ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான். தற்போது அவர் தன் மகள் “தில் பச்சாரா” படத்தில் வரும் ஒரு பாடலை இசையமைத்துள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தந்தையைப் போலவே மகளும் இந்த பாடலை அழகாக இசைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது சினிமா பிரபலங்களிடையேயும் அவரது ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அவர் கடைசியாக நடித்த “தில் பச்சாரா” திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடலை ரகுமான் இசையில் சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்தப்பாடல் அவர்களது ரசிகர்களால் அதிக வியூஸ் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளது.
வருகிற ஜூலை 24ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டைட்டில் பாடல் தற்போது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வரும் நிலையில், இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த பாடலைப் பலரும் பாடி, இசைத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CCoAjjeATCE/?igshid=1285ep4wi65vs
அந்த வரிசையில் ஏ.ஆர். ரகுமானின் மகள் ரஹீமா வாசிக்கும் இந்த வீடியோவை ரகுமான் தற்போது வெளியிட்டுள்ளார். ரகுமானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். ஏற்கனவே இவரது மகள் கதீஜா மற்றும் மகன் அமீன் இவரது படங்களில் பாடியுள்ள நிலையில் தற்போது மற்றொரு மகளும் இசைத்திருக்கும் வீடியோவை வெளியிட்டு தனது வாரிசுகள் தன்னைப்போலவே என்று நிரூபித்திருக்கிறார் ரகுமான்.