அருள்நிதியின் பர்த்டே ஸ்பெஷல்… மிரட்டலான ‘D ப்ளாக்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாண்டிராஜ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இப்போது அருள்நிதி நடிப்பில் ‘டைரி, தேஜாவு’ மற்றும் இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் ஹீரோயினாக அவந்திகா மிஸ் நடிக்கிறார்.

தற்போது, இன்று (ஜூலை 21-ஆம் தேதி) அருள்நிதியின் பர்த்டே ஸ்பெஷலாக இந்த படத்துக்கு ‘D ப்ளாக்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. இதனை ‘MNM ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் எத்தன் யொஹான் இசையமைக்கிறார்.

Share.