அருள்நிதியின் த்ரில்லர் படமான ‘தேஜாவு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ‘டைரி, தேஜாவு’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தேஜாவு’ திரைப்படம் இன்று (ஜூலை 22-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இதில் அருள்நிதியுடன் மதுபாலா, அச்யுத் குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், சேத்தன், காளி வெங்கட், மைம் கோபி, சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் இசையமைத்துள்ளார், பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார், அருள்.ஈ.சித்தார்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.