அருள்நிதியின் க்ரைம் த்ரில்லர் படமான ‘டைரி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. அருள்நிதியின் புதிய படமான ‘டைரி’-ஐ அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி வருகிறார். இவர் இயக்குநர்கள் அறிவழகன் மற்றும் அஜய் ஞானமுத்து இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

‘டைரி’ திரைப்படம் க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் ரெடியாகியுள்ளதாம். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், இன்று (ஜூலை 26-ஆம் தேதி) இப்படத்தின் ட்ரெய்லரை அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. இதில் ஹீரோயினாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் யோஹான் இசையமைத்துள்ளார். மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

 

Share.