அட்லீக்கும் விஜய்சேதுபதிக்கும் ஏற்பட்ட பிரச்சனை !

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் மசாலா படங்களை இயக்குவதில் வல்லவர் . ராஜா ராணி என்கிற காதல் படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இருக்குனராய் அறிமுகமாகி இருந்தார். இதன் பிறகு தெறி, மெர்சல் , என இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர்.

இதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கினார்.அந்தப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு அட்லீ தமிழில் படம் எடுக்கவில்லை .

தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு வீடியோ வெளியாகி வைரலாகியது .

இந்நிலையில் ஜவான் படத்தில் நடிகர் விஜய்யை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது . மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்த வருகிறார் . சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது .

படப்பிடிப்பின் போது விஜய்சேதுபதிக்கும் அட்லீக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது . விஜய் சேதுபதி படத்தின் காட்சியில் ஏதோ மாற்றம் சொல்லியிருக்கிறார் ஆனால் இயக்குனர் அட்லீ காட்சியில் மாற்றம் செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார் . இதனால் கடுப்பான விஜய் சேதுபதி கட்சி எழுதி இருந்த காகிதத்தை தூக்கி எறிந்துவிட்டு கேரவனுக்கு சென்று விட்டார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Share.