அட்லியை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ப்ரியா… வைரலாகும் வீடியோ!
January 4, 2022 / 12:57 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது. ‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது.
‘பிகில்’ படத்தை அடுத்து அட்லியின் சாய்ஸ் எந்த கோலிவுட் ஹீரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த முறையும் ஒரு டாப் ஹீரோ தான் அட்லியின் சாய்ஸாக இருந்தது. அதோடு ஒரு ட்விஸ்ட்டும் வைத்தார். இந்த முறை பாலிவுட் படத்துக்காக அங்குள்ள டாப் ஹீரோவை டிக் அடித்திருக்கிறார் அட்லி. அவர் தான் ஷாருக்கான். ‘லயன்’ (Lion) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம்.
இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை அட்லி இயக்க உள்ளாராம். இந்நிலையில், அட்லி தனது மனைவியும், நடிகையுமான ப்ரியாவுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.