மீராமிதுன் விமர்சனங்கள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் பாரதிராஜா!
August 11, 2020 / 04:14 PM IST
|Follow Us
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமான மீராமிதுன், தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களில் சிக்கி தற்போது ட்விட்டரில் தன் சர்ச்சைக்குரிய கமெண்ட் மூலம் வைரலாகி வருகிறார்.
முன்னணி நட்சத்திரங்கள் குறித்து வசைபாடி வரும் மீராமிதுனை பலரும் கோபத்துடன் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசியதற்கு அவரது ரசிகர்கள் மீராமிதுன் இவர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் மீராமிதுன் இதை ஒரு நெகடிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இவர் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றி கொச்சையாக பேசி வருகிறார். இது குறித்து நடிகர் சங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட நடிகர்களோ எந்த விதமான எதிர்ப்புகளும் தெரிவிக்காத நிலையில் இயக்குனர் பாரதிராஜா இதுகுறித்து ஆவேசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது “என் இனிய தமிழ் மக்களே சமீபகாலமாக பார்க்கும் அல்லது கேட்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை தருகிறது. புகழ் போதையில் ஒருவரை ஒருவர் இகழ்வதும் ஒருவர் பற்றிய தனிப்பட்ட வாழ்வை பற்றி அனைவரும் விமர்சிப்பதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும், இது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து கொள்வதுபோல தமிழ் சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாச்சாரம் தொடங்கி உள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.
ஒருவரை ஒருவர் மதித்து மரியாதையுடன் நடத்தி பணிபுரிந்த காலகட்டங்கள் மலையேறிவிட்டது என்று கவலையும் சேர்ந்து கொள்கிறது. இதோ நம் அன்பு தம்பி விஜய், சூர்யா போன்றோர் எவ்வளவு கடின உழைப்பால் அடித்தளங்களிட்டு தற்போது இவ்வளவு உயரத்தை எட்டியுள்ளார்கள். திருமணம் எனும் கண்ணிய வாழ்வை எய்தி தங்களது குடும்பத்தின் கவுரவத்தை நிலை நிறுத்தி வருகிறார்கள்.
அழகிய ஓவியத்தின் மீது சேர் அடிப்பதுபோல மீரா மிதுன் என்ற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்பு மீறி தூற்றியுள்ளார். திரையுலகில் இருக்கும் மூத்த உறுப்பினரான நான் இதை கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மீரா மிதுன் பக்குவம் இல்லாமல் புகழ் வெளிச்சம் தேடி இத்தகைய செயல்களை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். கௌரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தை இப்படி அவதூறு பேசுவதை இனிமேல் யாரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மீரா வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்து போராடி வாழ்கையை சரிசெய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. உங்கள் வார்த்தை அடுத்தவருக்கு வலியை தராமல் வளத்தை தருவது போன்று பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
தேர்தல் நிறை படாத சங்கம் என்றால், சொந்த தேவைகளுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூட நேரமில்லாமல் குரல்வளை நெரிக்கியுமா இந்த சங்கம் இருக்கிறது. யாரோ ஒருவரின் அவமானம் தானே என்று அமைதியாக இருந்தால் இந்த சேறு நம்மேல் விழுவதற்கு பல நாட்கள் ஆகாது.
ஊடகங்கள் பத்திரிகைகளுக்கென்று தர்மம் இருந்தது அதை தாண்டி இப்படிப்பட்ட விமர்சன செய்திகளை வெளியிடாமல் இருங்கள். உயரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட கெட்ட வார்த்தைகளை பேசி தங்கள் ரசிகர்களின் மனதில் பின்னுக்கு சென்று வருகிறார்கள்.நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி வருகிறார்கள்.
நீங்கள் இவ்வாறு விமர்சனங்களுக்கு உள்ளானால் ரசிகர்களின் கேவலமான வார்த்தைகளுக்கு உட்படுகிறார்கள். உங்கள் பெயரும் புகழும் நீடித்திருக்க நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே. என் போன்றோருக்கு உங்கள்மேல் தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்ததுபோல் வலிக்கிறது” என்று ஆவேசமாக தன் அறிக்கையை பதிவிட்டுள்ளார்.