இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தொலைக்காட்சி தொடர்களும் தொலைக்காட்சி பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விஜய் டிவியில் மிகவும் பேமஸ் ஆக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் இந்த வருடம் சரியான நேரத்தில் வெளிவருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வழக்கமாக பிக்பாஸ் பணிகள் ஏப்ரல் மாதமே துவங்கி, மே மாதம் முடிவடைந்து ஜூன் மாதம் ஒளிபரப்பாக துவங்கும். ஆனால் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.
பொதுவாக, ஜூன் மாதத்தில் வெளிவராது என்று தெரிகிறது. கடந்த 3 சீசன்களமே மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், நான்காவது சீசனுக்காக ஆட்கள் தேடும் பணியை எண்டாமோல் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. தொழில்நுட்ப கலைஞர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடியவர்களை பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 3க்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கருதப்படுவதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு நவம்பர் மாதம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் என்று நம்பப்படுகிறது.
பிக்பாஸ் சீசன் 4ல் நடிகை ரம்யா பாண்டியன், சிவாங்கி, புகழ் மற்றும் மணிமேகலை ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கம் போல சான்ஸ் கிடைக்காத முன்னாள் நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என கருதப்படுகிறது.