புதிய டாடா ஹேரியர் கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா… விலை என்ன தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேப்ரில்லா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் தான் ஹீரோவாக நடித்திருந்தார். அது தான் ‘3’. இந்த படத்தை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை கேப்ரில்லாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சென்னையில் ஒரு நாள், அப்பா’ என படங்கள் குவிந்தது. அதுமட்டுமின்றி, விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-யிலும் கலந்து கொண்டார் கேப்ரில்லா.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் சீசன் 2-வில் கேப்ரில்லா ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை கேப்ரில்லா புதிய டாடா ஹேரியர் கார் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கேப்ரில்லாவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இக்காரின் விலை ரூ.24.14 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

Share.