சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘அம்புலி’. அதன் பிறகு சனம் ஷெட்டியின் கால்ஷீட் டைரியில் ‘கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, வால்டர்’ என படங்கள் குவிந்தது.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த ‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் – சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது சனம் ஷெட்டிக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி ‘பிக் பாஸ்’ வீட்டில் என்ட்ரியாவதற்கு முன்பு நடித்த ‘எதிர் வினையாற்று’ படத்தின் ட்ரெய்லரை நாளை (நவம்பர் 12-ஆம் தேதி) அவரின் பர்த்டே ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அலெக்ஸ் என்பவர் ஹீரோவாக நடித்து, அவரே இளமைதாஸ் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.