‘பிக் பாஸ் 5’-க்காக குவாரண்டைனில் இருக்கும் திருநங்கை… அவரே போட்ட இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது.

சமீபத்தில், பிரபல நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளும், திருநங்கையுமான மிலாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “நீங்க ‘பிக் பாஸ்’ல கலந்து கொள்ளப்போவதாக கேள்வி பட்டேன். இந்த தகவல் உண்மையா?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மிலா “fingers crossed” என்று கூறியிருந்தார். தற்போது, மிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னையில் உள்ள ITC கிரான்ட் சோழாவில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் பிக் பாஸில் கலந்து கொள்வதற்காக குவாரண்டைனில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share.