“எல்லாரும் சூப்பர் சூப்பர்ன்னு கைகொடுத்தா, நம்ம வளர மாட்டோம்”… சின்னப்பொண்ணுக்கு டிஸ்லைக் கொடுத்த ராஜு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 நேற்று முன் தினம் (அக்டோபர் 3-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் சின்னப்பொண்ணு குறித்து ராஜு ஜெயமோகன் பேசுகையில் “கலைஞர்கள் யாரும் அவங்க கஷ்டத்தை காட்டாம முன்னாடி வந்து, அவங்கள பார்த்தா சிரிக்க மட்டும்தான் செய்யணும். நம்மளோட கஷ்டத்தை எடுத்து சொல்லித்தான் ஆகணும் அப்படிங்குற ஸ்டேஜ் தான் இது.

இருந்தாலும் உங்க பாட்டுல இருக்குற life இருக்குல, அது அந்த கதை எனக்கு பண்ணல. எல்லாரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்ன்னு கைகொடுத்தா, நம்ம வளர மாட்டோம். ஏதாவது நடந்து போற வழியில ஒரு சுவர் இருந்தாதான், அதை உடைக்கணும்னு நினைப்போம். நான் இன்னைக்கு உங்களுக்கு அந்த சுவர். இதையும் உடைச்சு மேல வாங்க” என்று சொல்லிவிட்டு அவருக்கு டிஸ்லைக் கொடுக்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.