பிரபல நடிகைக்கு வில்லனாக நடிக்க

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே மகா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஹன்சிகா தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்தை இகோர் இயக்குகிறார்.

இதில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரி ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லன் வேடத்துக்கு மாறும் கதாநாயகர்கள் பட்டியலில் தற்போது ஆரியும் இணைந்துள்ளார். இவரின் இந்த அடுத்த பரிணாமம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share.