நேற்று ரிலீஸான ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’… இந்த ஹிந்தி படத்தின் காப்பியா?
December 11, 2021 / 12:36 PM IST
|Follow Us
யூ டியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸானவர் ‘ப்ளூ சட்டை’ மாறன். இப்போது இவரும் வெள்ளித்திரையில் என்ட்ரியாகியுள்ளார். இவர் இயக்கியிருக்கும் முதல் படமான ‘ஆன்டி இண்டியன்’ (Anti Indian) நேற்று (டிசம்பர் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியதுடன் ‘ப்ளூ சட்டை’ மாறனே இசை அமைத்திருக்கிறாராம். இதில் ‘ப்ளூ சட்டை’ மாறனுடன் இணைந்து ராதாரவி, ‘பிக் பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி, ‘ஆடுகளம்’ நரேன், முத்துராமன் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
இதனை ‘மூன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதம் பாவா தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், வீரமணி கணேஷன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் இது 2014-ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் வெளியான ‘தேக் தமாஷா தேக்’ (Dekh Tamasha Dekh) என்ற படத்தின் காப்பி என்று ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்ட வண்ணமுள்ளனர்.
ஆண்டி இந்தியன் இதுல இருந்து இன்ஸ்பிரேசனா? இல்ல காப்பியா ??