விஜய் சேதுபதியை இயக்குகிறாரா பிருந்தா மாஸ்டர் ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா . இவர் 2000-ஆம் ஆண்டு வெளியான முகவரி படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார் . அதன் பிறகு காக்க காக்க ,மதுர , வாரணம் ஆயிரம் என பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் .

இந்த நிலையில் துல்கர் சல்மானை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கினார் பிருந்தா . கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . காஜல் , அதிதி , யோகி பாபு என பலர் நடித்து இருந்தனர் . கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் திரையரங்கில் சரியாக போகவில்லை என்றாலும் ஓ.டி.டியில் வெளியான பின் பலர் இந்த படத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் நன்றாக இருக்கிறது என பதிவிட்டனர் .

இந்த நிலையில் பிருந்தா அவர்கள் இரண்டாவது படத்தை இயக்க உள்ளார் என்றும் அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது .இதை பற்றி அதிகார்வபூர்வமான தகவல் இன்னும் வரவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகி விடும் என கூறப்படுகிறது .

Share.