எல்லையில் நேர்ந்த சோகம்- அஞ்சலி செலுத்தும் பிரபலங்கள்!
June 19, 2020 / 10:00 AM IST
|Follow Us
இந்திய-சீன எல்லையான லடாக் அருகில் உள்ள கால்வான் எனும் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்திய-சீன விரர்களுக்கிடையே போர் ஏற்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். இந்தியாவுக்காக சீனாவிடம் போரிட்டு உயிர் துறந்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக இந்திய மக்கள் சீனாவின் மீது பெரும் கோபத்தில் உள்ளனர். இதை சமூக வலைத்தளங்களில் அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதையடுத்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்த இருபது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, தன் மனமார்ந்த வீர வணக்கத்தையும் கூறியுள்ளார். இனிமேல் சீனப் பொருட்களை வாங்க கூடாது என்றும் கோபத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்திய ராணுவ வீரர் பழனி + 19 பேருக்கும் வீர வணக்கம் செலுத்தும் விதமாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம்! pic.twitter.com/sDPnHsY5xw
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 17, 2020
மேலும் இயக்குனர் அட்லி, வீரமரணமடைந்த 20 வீரர்களின் புகைப்படங்களை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வீரவணக்கத்தோடு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்திய-சீன எல்லையில் இறந்த இந்த இருபது வீரர்களுக்கு பல பாலிவுட் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன், வருண் தவான்,சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஷர்மா, சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இறந்த வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மேலும் மலையாள நடிகர் மோகன்லால், தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். “இறந்த வீரர்களுக்கு என் வீர வணக்கம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.