தமிழ் திரைப்பட நடிகரான விக்ரம் அவரது 60வது படத்தில் தன் மகனான துருவ்வுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது. இதைப் பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பார் என்றும் , 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சியான் விக்ரமின் 60 வது படத்தில் தன் மகனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார் என்பது சிறப்பம்சம். மேலும் துருவிற்கு இது தந்தையுடன் முதல் திரைப்படம். துருவ் விக்ரம் இதற்கு முன்னர் ஆதித்ய வர்மா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.