1990 ஆம் வருடம் நடிகராக தன் பயணத்தை தமிழ் திரையுலகில் ஆரம்பித்த நடிகர் விக்ரம் 1999ஆம் வருடம் பாலா இயக்கத்தில் வெளியான “சேது” படம் மூலம்தான் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
இதை தொடர்ந்து இவர் நடித்த தில், காசி, ஜெமினி, சாமுராய், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், தாண்டவம், ஐ, இருமுகன், கடாரம் கொண்டான் போன்ற வெற்றிப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.
தன் மாறுபட்ட கதாபாத்திர தேர்வு மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகர் விக்ரம் தன் உடலை வருத்தி நடிப்பதில் பெயர் போனவர். தற்போது இவரது மகன் துருவ் விக்ரம் தன் தந்தை மாஸாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். துருவ் விக்ரம் தன் தந்தையின் பெரிய ஃபேன் என்று எப்போதுமே கூறுவார்.
சமீபத்தில் “ஆதித்யா வர்மா”வின் தமிழ் ரீமேக்கில் நடித்திருந்த துருவ் விக்ரம் தன் தந்தையுடன் சேர்ந்து அடுத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது துருவ் விக்ரம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் விக்ரம் தாடியுடன் ஒரு ரக்ஹர்ட் லுக்கில் இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியான உடனேயே விக்ரம் ரசிகர்களிடையே இது படு வைரலாக பரவியது.
தற்போது விக்ரம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “துருவ நட்சத்திரம்” மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் “கோப்ரா” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது லாக்டோன் காரணமாக இந்த இரு பட வேலைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கோப்ரா திரைப்படத்தில் “தும்பி துள்ளல்” என்ற பாடல் வெளியிடப்பட்டு தற்போது ரசிகர்களிடையே இந்த பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடல் தற்போது சுமார் 6 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.